Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பேங்க் நெகாராவில் வெடிகுண்டு புரளி
தற்போதைய செய்திகள்

பேங்க் நெகாராவில் வெடிகுண்டு புரளி

Share:

நாட்டின் மத்திய பொருளகமான பேங்க் நெகாராவில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற மின் அஞ்சல் செய்தியைத் தொடர்ந்து இன்று பிற்பகலில் 3 மணியளவில் அந்த மத்திய வங்கியின் பணியாளர்கள் மத்தியில் பெரும் பதற்றமும் பீதியும் நிலவியது.

இது தொடர்பாக போலீசாரிடம் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பேங்க் நெகாராவின் கட்டட வளாகத்தில் வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் நடத்திய சோதனையில் எந்தவொரு வெடிப்பொருளும் இல்லை. மாறாக, அது வெறும் வதந்தி என்று உறுதி செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்தார்.

அந்த மின் அஞ்சலில் வந்த செய்தியில் உண்மையில்லை என்றும் வெறும் புரளி என்றும் அதனை அனுப்பிய நபர் தற்போது தேடப்பட்டு வருவதாகவும் டத்தோ அல்லாவுதீன் குறிப்பிட்டார்.

Related News