Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பினாங்கு ரேப்பிட் பேருந்து சேவை நிறுவனமான Rapid Bus Sdn Bhd மறுத்துள்ளனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பினாங்கு ரேப்பிட் பேருந்து சேவை நிறுவனமான Rapid Bus Sdn Bhd மறுத்துள்ளனர்

சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவிய PAS MUTIARA எனப்படும் வரம்பற்ற பயண அட்டை சலுகை குறித்தத் தகவலில் உண்மையில்லை என பினாங்கு ரேப்பிட் பேருந்து சேவை நிறுவனமான Rapid Bus Sdn Bhd மறுத்துள்ளனர்.

ரேபிட் பஸ்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி, மொஹமட் யஸுரின் விளக்களிக்கயில், அனைத்து வகையான போக்குவரத்திற்கும் ஆறு மாதங்களுக்கு RM14 விலையில் ஃபேஸ்புக் கணக்கு மூலம் வெளியிடப்பட்ட விளம்பரம் போலியானது என்றும் அந்தத் தகவலிக்கும் ரேபிட் பினாங்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

புதிய சலுகையோ அல்லது பயண அட்டை குறித்தத் தகவலோ இருப்பின், அது தங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களிலும் இணையப்பக்கத்திலும் மட்டுமே தமது தரப்பு வெளியிடும் என்றார்.

மேலும், தற்போது உலா வந்து கொண்டிருக்கும் போலியஆத் தகவல் குறித்து காவல் துறையில் புகர் அளிக்கப்பட்டிருப்பதாகவும்ம் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →