கடந்த திங்கட்கிழமை கோலாலம்பூர், ஜாலான் கெப்போங்கில் ஒரு காரை நோக்கி போலீசார் நடத்திய ஒன்பது துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மிக லாவபமாக தப்பிய 40 வயது கணேசன் உலக நாதன் பிடிபட்டுள்ளார். மூன்று குற்றவியல் பதிவுகளையும், எட்டு போதைப்பொருள் கடத்தல் பதிவுகளையும் கொண்டிருந்த அந்த நபர் நேற்று வியாழக்கிழமை காஜாங் வட்டாரத்தில் பிடிபட்டார். உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் அந்த சந்தேகப்பேர்வழி வளைத்தப் பிடிக்கப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் சின் தெரிவித்தார்.
சம்பவத்தன்று காலை 7.45 மணியளவில் இருவர் சென்ற காரை தடுத்து நிறுத்த முற்பட்ட போது, அவர்கள் காரை நிறுத்தாமல் இவ்விடத்திலிருந்து தப்பிக்க முற்பட்டனர். அப்போது அவர்கள் பயணம் செய்த காரின் டயர்களை நோக்கி போலீசார் ஒன்பது முறை சுட்டதில் கார் சிறிது தூரம் சென்ற அக்கார் தடம்புரண்டது. சம்பந்தப்பட்ட இவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றதாக முகமட் ஷுஹைலி குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


