Dec 3, 2025
Thisaigal NewsYouTube
9 மலேசியர்கள் நாளை தாயகம் திரும்பக்கூடும்
தற்போதைய செய்திகள்

9 மலேசியர்கள் நாளை தாயகம் திரும்பக்கூடும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.11-

காஸாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஃபிரிடம் ஃபுலோடில்லா கோலிஷன் என்ற 2 ஆம் கட்ட கப்பல் பயணத்தில் இடம் பெற்றவர்கள் இஸ்ரேல் இராணுவத்தினால் கைது செய்யப்பட்ட நிலையில் அதில் சிக்கிக் கொண்டுள்ள 9 மலேசியர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை தாயகம் திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த ஒன்பது பேரையும் மீட்டு, தாயகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் வெளியுறவு அமைச்சு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி மனித நேய உதவிகளைக் கொண்ட கப்பல்களைத் தடுத்து நிறுத்தி, அதில் உள்ள போராட்டவாதிகளையயும், தொண்டூழியர்களையும் கைது செய்து, இஸ்ரேல் தனது முரட்டுத்தனத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

Related News