ஒரு நீண்ட கால அடிப்படையில் இஸ்ரேலையும், அதன் கூட்டு நாடுகளையும் வீழ்த்துவதற்கு முஸ்லிம்கள், சமய அடிப்படையில் வலிமைமிகுந்தவர்களாக திகழ வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு ஒன்றிணைந்து , சமயத்தால் ஒன்றுப்பட்டவர்களாக முஸ்லிம்கள் திகழும் போது, தங்கள் சொந்த நாட்டை மட்டுமின்றி தங்களின் தோழமை நாடுகளையும் அவர்களால் பாதுகாக்கவும், தற்காக்கவும் இயலும் என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.
நவீன போர் விமானங்கள், கவச வாகனங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை பயன்படுத்தும் திறனை முஸ்லிம்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று துன் மகாதீர் கேட்டுக்கொண்டார்.
இந்த உலகில் நாம் வாழ்வதற்கு ஒரு பாதுகாப்பான சூழலை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று துன் மகாதீர் வலியுறுத்தினார்.








