Oct 10, 2026
Thisaigal NewsYouTube

கனத்த மழை, ஷா ஆலாமில் பல்வேறு பகுதிகள் வெள்ளக் காடானது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கனத்த மழை, ஷா ஆலாமில் பல்வேறு பகுதிகள் வெள்ளக் காடானது

ஷா ஆலாம், ஜூன்.20-

கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று காலையில் பெய்த கனத்த மழையில் ஷா ஆலாம் வட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

ஜாலான் கெபுன், கோத்தா கெமுனிங் மற்றும் செக்‌ஷன் 32 ஆகிய பகுதிகளில் நீரின் மட்டம் முழங்கால் வரை உயர்ந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகள் மற்றும் கடை வீடுகளில் நீரின் மட்டம் உயர்ந்த வேளையில் பிரதான சாலைகளில் நீர் கரைபுரண்டோடியதை அப்பகுதி மக்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் சித்தரிக்கின்றன.

முன்னதாக, இன்று காலை 11 மணி வரை இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும், இது தாழ்வான பகுதிகளில் வெள்ளத்திற்கு வித்திடும் என்று வானிலை ஆய்வுத்துறை எச்சரித்து இருந்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →