Oct 9, 2026
Thisaigal NewsYouTube

மேருவில் ஆடவர் மரணம்: கொலையாளியைத் தேடும் காவல் துறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மேருவில் ஆடவர் மரணம்: கொலையாளியைத் தேடும் காவல் துறை

கிள்ளான், ஜூன்.20-

இன்று பிற்பகல், கிள்ளான், மேருவில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்திற்கு முன்புறம், இரத்த வெள்ளத்தில் கிடந்த 46 வயது மதிக்கத்தக்க ஓர் ஆடவர், துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் மரணமடைந்தார். இந்தச் சம்பவம் குறித்து பிற்பகல் 3.37 மணியளவில் தகவல் கிடைத்ததாக வட கிள்ளான் மாவட்டக் காவல்துறைத் தலைவர், அசிஸ்டன் கமிஷனர் எஸ். விஜய ராவ் தெரிவித்தார்.

சம்பவ இடத்திலேயே மருத்துவ ஊழியர்களால் அவ்வாடவரின் மரணம் உறுதிச் செய்யப்பட்டது. இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 302 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. மேலும், சந்தேக நபர்கள், கொலைக்கான நோக்கம் குறித்த விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →