Oct 16, 2026
Thisaigal NewsYouTube

இரண்டு காவல் துறை அதிகாரிகள் உதவிய செய்தி பலராலும் பாராட்டப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரண்டு காவல் துறை அதிகாரிகள் உதவிய செய்தி பலராலும் பாராட்டப்பட்டது

டிச.6-

பணக் கஷ்டத்தில் இருக்கும் ஒரு நபருக்கு இரண்டு காவல் துறை அதிகாரிகள் உதவிய செய்தி பலராலும் பாராட்டப்பட்டது. இந்த சம்பவம் குறித்த காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. 3 நிமிடங்கள் 35 வினாடிகள் வரை நீளம் கொண்ட அந்தக் காணொலியில் ஒருவர் ரோந்துப் பணியில் இருக்கும் ஒரு காவல் துறை வாகனத்தை நிறுத்தி, தனது கைக்கடிகாரத்தை விற்க முயற்சிப்பதாகத் தெரிகிறது..

அந்த ஆடவர் தமக்க்குப் பணத் தேவை இருப்பதால் தனது கைக்கடிகாரத்தை விற்க முயன்றதாக கூறினார். பூச்சோங்கில் வேலை தேடத் தொடங்கிய அந்த நபர், பெட்டலிங் ஜெயா வரை வந்ததாக கூறினார். காவல் துறை அதிகாரிகள் கைக்கடிகாரத்தை வாங்கவில்லை, மாறாக அந்த நபருக்கு சிறிது பணம் கொடுத்து உதவினர்.

இதனை அறிந்த காவல் துறைத் தலைவர் Tan Sri Razarudin Husain , இந்த இரண்டு அதிகாரிகளின் செயல் மிகவும் பாராட்டத் தக்கது என்றார், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளான Koperal Mohd Fandy Abd Lahit, Lans Koperal Mohmmad Hafizul Hakimi ஆகியோரின் செயல் காவல் துறையினருக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு எனவும் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →