சிரம்பான், அக்டோபர்.14-
ரெம்பாவில் உள்ள ஒரு பள்ளியின் கழிவறையில் ஒன்பது வயது மாணவியைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், 22 வயது பெண்ணும், அவரது காதலனும் இன்று நீதிமன்றத்தில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று கூறியுள்ளனர்.
அப்பள்ளியில் பாதுகாப்பு பணியாளராகப் பணியாற்றிய நோர் அலியா சுஹாடா முகமட் மற்றும் அவரது காதலர் முவாமாட் முகமட் மொக்தார் ஆகியோர் மீது தனித்தனியாகக் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது. இருவரும் நீதிபதி என். ககனேஸ்வரி முன்னிலையில் குற்றமற்றவர்கள் எனத் தெரிவித்தனர்.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை அப்பள்ளியின் பெண்கள் கழிவறையில் இக்குற்றச் செயலில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டு 2017 சிறுவர் மீதான பாலியல் குற்றம் பிரிவு 14(அ)-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.








