Jul 29, 2026
Thisaigal NewsYouTube
தென்சீனக் கடல் விவகாரம் : சீனாவிடம் உரிமையை விட்டுக்கொடுக்காது மலேசியா
தற்போதைய செய்திகள்

தென்சீனக் கடல் விவகாரம் : சீனாவிடம் உரிமையை விட்டுக்கொடுக்காது மலேசியா

Share:

மணிலா , ஜூலை 03-

சீனாவுடன் நல்லுறவை கொண்டுள்ள போதிலும், தென் சீனக்கடல் விவகாரத்தில், நாட்டின் இறையாண்மையை தற்காப்பதில் மலேசியா திடமாக உள்ளது.

அந்தக் கடலில் நாட்டின் உரிமை நிலைநாட்டப்படும்.

அதன் பொருட்டு நடப்பில் உள்ள அணுகுமுறைகளுக்கு ஏற்ப சீனாவுடன் சுமூகமான முறையில் பேச்சுகள் நடத்தப்படுவதாக வெளியுறவுத் துணையமைச்சர் டத்தோ மொஹமட் ஆலமீன் தெரிவித்தார்.

நாட்டின் இறையாண்மை விவகாரத்தில், விட்டுக் கொடுக்கும் போக்கு ஒருபோதும் கடைப்பிடிக்கப்படாது எனவும் அவர் உறுதிக்கூறினார்.

சீனாவுக்கு கடந்த மாதம் துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி பயணம் மேற்கொண்டிருந்த போது, தென்சீனக்கடலில் அந்த வல்லரசு புரியும் அத்துமீறல்கள் தொடர்பில், மலேசியா கொண்டிருக்கும் நிலைப்பாடு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில், கங்கர் உறுப்பினர் சக்ரி ஹாசன்-னின் கேள்விக்கு டத்தோ மொஹமட் ஆலமீன் பதலளித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்