Jul 31, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

வெள்ளப் பேரிடர் காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் தேவை

Share:

தற்போது நிலவி வரும் வெள்ளப் பேரிடர் காலத்தில், மின்சாரம், எரிவாயு போன்றவற்றைப் பயன்படுத்துவதில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறும், விழிப்புடன் இருக்குமாறும் எரிசக்தி ஆணையம் பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது.

வெள்ளத்தால் மின்கம்பங்கள் சாய்ந்து விழுவது, துண்டிக்கப்பட்ட மின்கம்பிகள், மின்சாரம் அல்லது எரிவாயு சாதனங்களுக்கு சேதம் ஏற்படுவது உள்ளிட்ட பல்வேறு ஆபத்துகள் ஏற்படலாம்.

எனவே, மின்சாரம், எரிவாயு சார்ந்த பொருட்களை உட்படுத்திய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்படக்கூடிய சில நடவடிக்கைகளை ஆணையம் பகிர்ந்து கொண்டது.

பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டால், மின்சாரம் சார்ந்த கருவிகளை உயரமான இடத்தில் வைத்திருப்பது, அவை வெள்ளத்தில் சிக்காமல் பாதுகாப்பது, மின் விநியோகப் பலகையில் உள்ள ஸ்விட்சை அணைப்பது போன்றவற்றை பொது மக்கள் உறுதி செய்ய வேணும் எனக் கேட்டுக் கொண்டது.

Related News