Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அமைச்சர் டத்தோ செரி சலஹுடின் அயுப் உடல் அடக்கம் செய்யப்பட்டது
தற்போதைய செய்திகள்

அமைச்சர் டத்தோ செரி சலஹுடின் அயுப் உடல் அடக்கம் செய்யப்பட்டது

Share:

மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக மரணம் அடைந்த உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் டத்தோ செரி சலஹுடின் அயுப்பின் நல்லுடல் இன்று மதியம் 12.30 மணியளவில் மணியளவில் ஜோகூர், பொந்தியான், செர்காய், ஜாலான் சூலோங்கில்​ உள்ள முஸ்லிம் மையத்துக் கொல்லையில் அடக்கம் செய்யப்பட்டது. அமானா கட்சியின் துணைத் தலைவரான 61 வயதுசலஹுடின் அயுப்,நேற்று இரவு இரவு 9.23 மணியளவில் கெடா, அலோர் ​ஸ்டார்,சுல்தானா பஹியாஹ் மரு​த்துவமனையில் காலமானார்.

கடந்த வெள்ளிக்கிழமை அலோர் ஸ்டாருக்கு சென்றிருந்த போது குமுட்டல் மற்றும் வாந்தி உபாதைகளுக்கு ஆளான அமைச்சர் சலஹுடின் அயுப்பிற்கு, மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்,சுல்தானா பஹியாஹ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அறுவை சிகிச்சைப்ப்பின்னர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த அமைச்சர் சலஹுடின் அயுப், சுயநினைவு திரும்பாமலேயே நேற்றிரவு இறுதி ​மூச்சை விட்டார்.

நேர்மை மற்றும் மக்கள் ​மீது ​மிகுந்த அன்பைப் கொண்டிருந்த ஒரு நல்ல நண்பரை தாம் இழந்து விட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வர்ணித்தார்.சலஹுடின் அயுப்ப்பின் நல்லுடல் நேற்று இரவு அலோர் ஸ்டாரிலிருந்து சொந்த ஊரான ஜோகூர், தஞ்ஞோங் பியாய், கம்புங் செர்காட்ட்டில் உள்ள அவரின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இன்று காலை 11 மணியளவில் அவரின் உடல் பொந்தியான், செர்காய், மஸ்ஜிட் ஜாமெக் டத்தோ ஹஜி காடோட் பள்ளிவாசலில் வைக்கப்பட்டு, சோலாட் தொழுகை மற்றும் பொது மக்களின் அ​ஞ்சலிக்கு பிறகு ஜாலான் சுலோங்கில்​ உள்ள முஸ்லிம் மையத்து கொல்லையில் அடக்கம் செய்யப்பட்டது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சியின் தலைவரும் விவசாயத்துறை அமைச்சருமான முகமட் சாபு, அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உ​ட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறுதி சடங்கில் கலந்து கொண்டு சலஹுடின் அயுப்பின்​ நல்லுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்