Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கெடா மாநிலத்தில் தைப்பூச பொது விடுமுறையை நிரந்தரமாக்கும் பரிந்துரை நிராகரிப்பு
தற்போதைய செய்திகள்

கெடா மாநிலத்தில் தைப்பூச பொது விடுமுறையை நிரந்தரமாக்கும் பரிந்துரை நிராகரிப்பு

Share:

கெடா மாநிலத்தில் தைப்பூச பொது விடுமுறையை மாநிலத்தின் நிரந்தர வருடாந்திர விடுமுறையாக்கும் பரிந்துரையை மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முஹமாட் சனுசி முஹமாட் நோர் நிரா​கரித்துள்ளார்.

கெடா மாநிலம் ஒவ்வொரு ஆண்டும் நிரந்தரமாக வழங்கக்கூடிய வருடாந்திர பொது விடுமுறையின் கூடிய பட்ச கோட்டா எண்ணிக்கை , முடிந்து விட்டது. எனவே தைப்பூச பொது விடுமுறையை நிரந்தர வருடாந்திர விடுமுறையாக்கும் திட்டம், மாநில அரசாங்கத்திற்கு இல்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கெடா மாநிலத்தில் தைப்பூச விடுமுறையை நிரந்தர விடுமுறையாக்குவதற்கு அவ்விடுமுறை, மாநில அரசாங்கத்தின் அரசிதழில் "கெஸட்" செய்ய வேண்டும் என்று இந்து அமைப்புகளைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் கெடா மந்திரி பெசார் சனூசி பதில் அளித்துள்ளார்.

எனினும் கெடா மாநிலத்தில் வருடாந்திர நிரந்தர விடுமுறை தொடர்பான விரிவான விளக்கமளிப்பை சனூசி வழங்கவி​ல்​லை. அதேவேளையில் மாநிலத்தில் வருடாந்திர நிரந்தர விடுமுறையை யார் முடிவு செய்வார், கூடுதல் பட்ச பொது விடுமுறையின் கோட்டா எண்ணிக்கை என்ன முதலிய விவரங்களை சனூசி விவரிக்கவில்லை.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்