ஷா ஆலாம், ஜூலை.14-
சிலாங்கூர் மாநிலத்தில் நடந்ததாகக் கூறப்படும் இஹாத்தி எனும் இல்லறத் தன்முனைப்புப் பயிற்சியில் உண்மையிலேயே ஆபாச அம்சங்கள் இருந்துள்ளனவா? என்பது குறித்து தற்போது தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது என்று மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.
இறக்கைக்கு மாறாக, மாறுபட்ட கலாச்சார அம்சங்கள் இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பில் குற்றவியல் சட்டம் 294, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த இஹாத்தி பயிற்சியில் பங்கேற்ற அனைவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்தப் பயிற்சியில் ஒரு பகுதியாக ஆபாச நடனங்கள் இடம் பெற்றதாகக் கூறப்படுகிறது.








