May 22, 2026
Thisaigal NewsYouTube
எட்டு வயது பிள்ளையை முத்தமிட்ட ஆடவருக்கு 4 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

எட்டு வயது பிள்ளையை முத்தமிட்ட ஆடவருக்கு 4 ஆண்டு சிறை

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி 22 -

அண்டை வீட்டுக்காரரின் எட்டு வயது மகளை வாஞ்சையுடன் கட்டியணைத்து, தூக்குவதைப் போல் அந்த சிறுமியின் உதட்டில் முத்தமிட்ட 22 வயது ஆடவருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் 4 ஆண்டு சிறையும், ஒரு பிரம்படித் தண்டனையும் விதித்தது.

அந்த சிறுமியை தூக்கி, தாம் கொஞ்சும் போது, வக்கிர எண்ணமும், பாலியல் நோக்கமும் இருந்ததாக அந்த இளைஞர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதிமுகமது கஃப்லி சே அலி, , இத்தண்டனையை விதித்தார்.

சம்பந்தப்பட்ட ஆடவர் கைது செய்யப்பட்ட தினமான கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் சிறைத் தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

அந்த ஆடவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுன் 25 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் கோலாலம்பூர், சுங்கை பீசி, பி.பி.ர் அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் 2017 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றங்சாட்டப்பட்டு இருந்தார்.

Related News