டத்தோ அந்தஸ்தை கொண்ட தொழில் அதிபர் ஒருவர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டது தொடர்பில் விசாரணைக்கு தாம் அழைக்கப்படலாம் என்று கூறப்படும் தகவல், வெறும் வதந்தியாகும் என்று மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார். இது போன்ற வதந்திகளுக்கு பதில் அளிக்க வேண்டியதில்லை என்று டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டுள்ளார்.
அம்லா எனப்படும் 2001 ஆம் ஆண்டு சட்டவிரோதப் பணமாற்றம் தொடர்பாக நாட்டின் முன்னணி தொழில் அதிபரும், திரைப்பட விநியோகிப்பு மற்றும் மாபெரும் கலைநிகழ்ச்சி ஏற்பட்டாளருமான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் சென்டிரியன் பெர்ஹாட் டின் உரிமையாளரான டத்தோ மாலிக், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டது தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஒருவர்,விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் முன்னாள் மனித வள அமைச்சரான டத்தோஸ்ரீ சரவணன் எவ்.எம்.தி யிடம் மேற்கண்டவாறு எதிர்வினையாற்றியுள்ளார்.

Related News

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்


