ஜார்ஜ்டவுன், ஜனவரி.13-
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் பினாங்கு, Ho Tiang Road பகுதியில் நிகழ்ந்த கைகலப்பு சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜார்ஜ்டவுன் போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் ரோஸாக் முஹமட் தெரிவித்தார்.
ஓர் உணவகத்தின் முன்பாக ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியது. இது தொடர்பாக நடத்திய அதிரடிச் சோதனையில், 18 முதல் 35 வயதுடைய 6 நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
குடிபோதையில் ஏற்பட்ட சிறு தகராறு கைகலப்பாக மாறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தின் போது சிலருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சண்டையில் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் சில பொருட்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆதாரங்களாகக் கைப்பற்றியுள்ளதாக ஏசிபி அப்துல் ரோஸாக் தெரிவித்தார்.








