Oct 18, 2026
Thisaigal NewsYouTube

Holdings Global Ikhwan தொடர்பில் 200 பேர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
Holdings Global Ikhwan தொடர்பில் 200 பேர் கைது

கோலாலம்பூர், செப்டம்பர் 21-

சிறார்களை துன்புறுத்தியதாக கூறப்படும் Holdings Global Ikhwan நிறுவனம் சம்பந்தப்பட்ட புலன் விசாரணையில் இதுவரையில் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

பிடிபட்டுள்ள இந்த 200 பேரில் 139 பேரின் தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ள வேளையில் 23 பேர், குறிப்பிட்ட காரணங்களுக்காக போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று ஐஜிபி குறிப்பிட்டார்.

Global Ikhwan நிறுவனத்தில் முக்கியப்பொறுப்பு வகிக்கும் 17 பேர் உட்பட அந்த நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த 31 பேரை வளைத்துப்பிடிப்பதில் போலீசார் வெற்றிக் கண்டுள்ளதாக டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன்விவரித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →