Oct 5, 2026
Thisaigal NewsYouTube

இந்தியப் பிரஜையான பணிப் பெண் கொலை; வர்த்தகர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இந்தியப் பிரஜையான பணிப் பெண் கொலை; வர்த்தகர் மீது குற்றச்சாட்டு

31 வயது வர்த்தகர் ஒருவர், இந்தியப் பிரஜையான வீட்டுப் பணிப் பெண்ணைக் கொலை செய்ததாக இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

என். ஸ்டீவன் அந்தோணி என்ற அந்த நபர், கே. தமிழரசி என்ற இந்தியப் பிரஜையைக் கொலை செய்ததாக குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.

இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்பதால், அவரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் காலை 10.55 மணி வரையில், கோலாலம்பூர், தித்திவாங்சாவில் உள்ள ஒரு வீட்டில் கே. தமிழரசியைக் கொலை செய்ததாக அவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் ஸ்டீவன் அந்தோணி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →