கோலாலம்பூர், நவம்பர்.07-
பாலாகோங், தாமான் ஶ்ரீ தீமா அருகிலுள்ள மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க, சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக போராடிய சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் இன்று அதிகாலை அதனை முழுமையாக அணைத்தனர்.
நேற்று வியாழக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் தங்களுக்குக் கிடைத்த அவசர அழைப்பின்படி, சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்துள்ளார்.
மலைப்பகுதியில் சுமார் 2.4 ஏக்கர் பரப்பளவில் இந்த காட்டுத் தீ பரவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதையும் முக்லிஸ் முக்தார் உறுதிப்படுத்தியுள்ளார்.








