கோலாலம்பூர், ஆகஸ்ட்.12-
மலேசியாவில் சட்டப்பூர்வமாக வேலை செய்து வரும் அந்நியத் தொழிலாளர்களின் நலனைக் கவனித்துக் கொள்வது என்பது நாட்டின் தார்மீகக் கடப்படாகும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் தெரிவித்துள்ளார்.
அந்நியத் தொழிலாளர்களின் நலன் சார்ந்த அம்சங்களை மலேசியா எளிதில் புறக்கணித்து விட முடியாது என்று அஸாலினா குறிப்பிட்டார்.
அந்நியத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பள விகிதம் மற்றும் இபிஎப் சலுகை வழங்கப்படுவதை ஆட்சேபித்து லிம் குவான் எங் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் அஸாலினா எதிர்வினையாற்றினார்.








