Feb 17, 2026
Thisaigal NewsYouTube
மூவாரில் கேபள் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது
தற்போதைய செய்திகள்

மூவாரில் கேபள் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

Share:

மூவார், பிப்ரவரி.17-

மூவாரிலுள்ள தோட்டம் ஒன்றில், தொலைத்தொடர்பு கேபள் திருட்டில் ஈடுபட்ட மூவர், அதனை எடுத்துக் கொண்டு இரு வாகனங்களில் தப்பியோட முயன்ற போது, கைது செய்யப்பட்டனர்.

நேற்று திங்கட்கிழமை அதிகாலை 2.51 மணியளவில் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு மையத்தின் MERS 999 என்ற அவசர எண்ணிற்கு அழைப்பு வந்ததையடுத்து, போலீசார் விரைந்து சென்று, மடக்கிப் பிடித்ததாக மூவார் மாவட்ட போலீஸ் உதவி ஆணையர் ராயிஸ் முக்லிஸ் அஸ்மான் அஸிஸ் தெரிவித்துள்ளார்.

பாதிட் ஜாவாவில் ஜாலான் தெமெங்கோங் அஹ்மாட் Jalan சாலை அருகேயுள்ள, பாரிட் காசிம் பாலம் அமைந்துள்ள பகுதியில் சம்பந்தப்பட்ட கேபள் திருட்டானது கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது, மூவரில் ஒருவர் முதலில் கைது செய்யப்பட்டு, பின்னர் தப்பியோடிய மற்ற இருவரை அன்றைய தினமே போலீசார் கைது செய்ததாகவும் ராயிஸ் முக்லிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Related News