நேற்று லெம்பா சுபாங்கின் குடியிருப்புப் பகுதியில் , காவல்துறை அதிகாரிகள் ஓட்டிச் சென்ற வாகனத்தின் மீது இருவர் பட்டாசுகளை வீசியதால் அவர்கள் தடுத்து சைக்கப்பட்டனர்.
பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சிலர் பட்டாசுகளை வெடிப்பதாக சம்பந்தப்பட்ட குடியிருப்புப் பகுதிவாசிகளிடம் இருந்து தமது தரப்புக்கு எற்கெனவே புகார் கிடைத்திருந்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் முஹமாட் ஃபக்ருடின் அப்துல் ஹாமிட் தெரிவித்தார்.
அவ்வாறான சம்பவம் நடப்பதாக நம்பப்படும் இடத்திற்கு இரண்டு காவல் துறை ரோந்து கார்கள் அனுப்பப்பட்டன. அதிகாலை 4.35 மணியளவில் அங்கு 50 க்கும் மேற்பட்ட குடியிருப்புபாசிகள் கூடி இருப்பதைக் காவல் துறை அதிகாரிகள் கண்டதாக முஹமாட் ஃபக்ருடின் கூறினார்.
"தங்கள் வீடுகளும் வாகனங்களும் சேதமடையும் என்ற அச்சத்துடன் வெடி சத்தத்தால் தாங்கள் தொந்தரவு செய்யப்படுவதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்ததாக முஹமாட் ஃபக்ருடின் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.
வெடி வெடித்து தொந்தரவு செய்வதாக நம்பப்படும் இருவர் காவல் துறையின் வாகபம் மீதும் பட்டாசுகளை வீசி இருக்கின்றனர். அவ்வ்9வகாரம் குறித்த விசாரணைக்குப் புறகு இருவர் கைது செய்யப்பட்டனர்.
பிடிபட்ட இருவருக்கும் பல்வேறு விவகாரங்களில் குற்றப் பின்னணி இருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே. அவர்கள் இருவரும் விசாரணைக்காக 2 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாக முஹமாட் ஃபக்ருடின் கூறினார்.








