Oct 2, 2026
Thisaigal NewsYouTube

சாலையின் நடுவே படுத்திருந்த பெண் கார் மோதி பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சாலையின் நடுவே படுத்திருந்த பெண் கார் மோதி பலி

கோலா திரங்கானுவில் ஜாலான் ஜம்பாத்தான் சுல்தான் சாலையின் நடுவே படுத்திருந்த 39 வயது பெண் ஒருவர் கார் மோதி உயிரிழந்தார்.

இன்று அதிகாலை 1.15 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், அய்னுன் வாஹாப் என்பவர் சம்பவ இடத்திலேயே பலத்த காயங்களால் உயிரிழந்ததாக கோலா திரங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்லி நூர் தெரிவித்துள்ளார்.

கோங் பாடாக்கில் இருந்து கோலா பெராங் நோக்கி புரோட்டோன் வாஜா காரில் சென்ற 28 வயது ஆடவர், சாலையில் படுத்திருந்த பெண்ணைத் தவிர்க்க முடியாமல் மோதியதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவ்விபத்தில் ஓட்டுநருக்கு காயம் ஏற்படவில்லை என்பதோடு, சம்பந்தப்பட்ட காரும் சேதமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →