Michaung புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருதால் தமிழ்நாட்டிற்கு செல்கின்ற மலேசியர்கள் தங்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும்படி மலேசிய வெளியுறவு அமைச்சரான விஸ்மா புத்ரா அறிவுறுத்தியுள்ளது. .
கடந்த இரண்டு நாட்களாக விமானச் சேவை பாதிக்கப்பட்ட நிலையில் வங்கக்கடலில் வேகமெடுத்து வரும் மிச்சவுங் புயலின் கடுமையை, விஸ்மா புத்ரா அணுக்கமாக கண்காணித்து வருவதாக அது தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, , காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட பல பகுதிகள் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மணிக்கு 90 முதல் 100 மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய இந்த Michaung புயலினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயணம் மேற்கொண்டுள்ள மலேசியர்கள், உள்ளூர் ஊராட்சி மன்றங்கள் வெளியிடும் வழிகாட்டல்களையும், அறிவுறுத்தல்களையும் பின்பற்றும்படி விஸ்மா புத்ரா கேட்டுக்கொண்டுள்ளது.
ஆபத்து அவசர வேளையில் உதவித் தேவைப்படக்கூடிய மலேசியர்கள், சென்னையில் உள்ள மலேசிய துணை தூதரகம் மற்றும் புதுடில்லியில் உள்ள மலேசிய தூதரகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு மலேசியர்களை கேட்டக்கொண்டுள்ளது.
தொடர்புக்கு :
Suruhanjaya Tinggi Malaysia di New Delhi
Telefon : +91-11-2415 9300 / +91-85955 50594 (selepas waktu pejabat)
Faks : +91-11-2688 1538
E-mel/ Laman sesawang : [email protected]
(https://www.kln.gov.my/web/ind_new-delhi/home)
Konsulat Jeneral di Chennai
Telefon: +914424334434/35/36/ +917550022001
Emel: [email protected]
Facebook: https://www.facebook.com/mwchennai.chennai








