Dec 2, 2025
Thisaigal NewsYouTube
முகைதீன் யாசினுடன் இணைந்து பணியாற்றத் தயார் துன் மகாதீர் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

முகைதீன் யாசினுடன் இணைந்து பணியாற்றத் தயார் துன் மகாதீர் அறிவிப்பு

Share:

மலாய்க்காரர்களின் நலனுக்காக பரஸ்பர இலக்குகளில் உடன்பாடு காணப்பட்டால் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினுடன் இணைந்த பணியாற்ற தாம் தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது இன்று அறிவித்துள்ளார்.

நாட்டில் மலாய்க்காரர்களின் நலனை முதன்மைப்படுத்தவதிலும், ஊழல் மற்றும் குற்றவியல் செயல்களில் ஈடுபட்டவர்களை புறந்தள்ளவும் முகைதீன் யாசினுடன் இணைந்து பணியாற்றத் தாம் தயாராக இருப்பதாக துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

முகைதீனுடன் இணைந்து பணியாற்றுவதற்கு முன்னதாக சில பரஸ்பர உடன்பாடுகளுக்கு இணக்கம் காண வேண்டியுள்ளது. அவை சாத்தியாகுமானால் முகைதீனுடன் இணைந்து மலாய்க்காரர்களின் நலனை முன்னெடுப்பதில் தமக்கு பிரச்னையில்லை என்று துன் மகாதீர் கூறினார்.

Related News