Aug 6, 2026
Thisaigal NewsYouTube
லோரியின் அடியில் சிக்கி ஓட்டுநர் மரணம்
தற்போதைய செய்திகள்

லோரியின் அடியில் சிக்கி ஓட்டுநர் மரணம்

Share:

லோரி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலையைவிட்டு விலகி ஆற்றுப் படுகை பாதாளத்தில் விழுந்ததில் லோரியின் அடியில் சிக்கி அதன் ஓட்டுநர் உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று அதிகாலையில் பகாங் காராக், தெலெமோங் போலீஸ் நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்தது.

அந்த 3 டன் லோரி சுமார் 40 மீட்டர் பள்ளத்தில் விழுந்ததில் அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக பகாங் மாநில தீயணைப்பு நிலைய பொது உறவு அதிகாரி சுல்பத்லி ஜகாரியா தெரிவித்தார்.

நீரோட்டம் நிறைந்த ஆற்று பள்ளத்தாக்கில் அந்த லோரி விழுந்ததாக அவர் குறிப்பபிட்டார்.

லோரியின் அடியில் சிக்கிக் கொண்ட ஓட்டுநரின் உடலை பிரத்தியேக சாதனங்களை கொண்டு மீட்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News