Jul 31, 2026
Thisaigal NewsYouTube
மாதுவிற்கு 240 மணி நேர சமூக சேவை செய்ய உத்தரவு
தற்போதைய செய்திகள்

மாதுவிற்கு 240 மணி நேர சமூக சேவை செய்ய உத்தரவு

Share:

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது மூன்று பிள்ளைகளை கைவிட்டு சென்ற குற்றத்திற்காக மாது ஒருவருக்கு மலாக்கா, ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 6 மாத காலத்திற்கு 240 மணி நேரத்திற்கு சமூகச் சேவையில் ஈடுபட உத்தரவிட்டுள்ளது.

41 வயதுடைய அந்த மாதுவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட இரண்டு திருத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி டர்மாஃபிக்ரி அபு அடாம் இத்தீர்ப்பை வழங்கினார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மலாக்கா தெங்கா மாவட்டத்தில் தாமான் காடொங் பெர்டானாவில் தனது 6, 8, 11 வயதுடைய மூன்று பிள்ளைகளை கைவிட்டு சென்றதன் காரணமாக அந்த மூன்று பிள்ளைகளும் மனோரீதியாக பாதிக்கப்பட்டுதுடன் காயத்திற்கு ஆளானதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News