Sep 26, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவின் ஒற்றுமைக்கும் நிலைத்தன்மைக்கும் மலாய்-இஸ்லாமிய ஒருங்கிணைப்பு அவசியம் - டாக்டர் சாம்
தற்போதைய செய்திகள்

மலேசியாவின் ஒற்றுமைக்கும் நிலைத்தன்மைக்கும் மலாய்-இஸ்லாமிய ஒருங்கிணைப்பு அவசியம் - டாக்டர் சாம்

Share:

கோலாலம்பூர், மே.24-

நாட்டின் தேசிய நிலைத்தன்மைக்காகவும் மக்களின் நலனுக்காகவும் மலாய்-இஸ்லாமிய ஒருங்கிணைப்பும் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கும் முன்னுரிமை அளிக்கப் போவதாக பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவரான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சம்சூரி மொக்தார் தெரிவித்துள்ளார். மலேசியாவின் பன்முகத்தன்மையை ஒரு பொறுப்பாகப் பார்க்காமல், நாட்டின் வலிமைக்கான ஒரு சொத்தாகக் கருதி, அதனை விவேகத்துடன் கையாள வேண்டும் என்று அவர் தனது முகநூல் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய ஒற்றுமையை வெறும் தேர்தல் காலங்களில் மட்டும் கடைபிடிக்காமல், அதனை ஒரு தேசிய நிகழ்ச்சி நிரலாகத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். வெறுப்பையும் பாரபட்சங்களையும் ஒழித்து, அமைதியான, உலக அளவில் மதிக்கப்படும் ஒரு நாட்டை உருவாக்க மலேசியர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

Related News