Oct 18, 2026
Thisaigal NewsYouTube

வானிலை ஆய்வு துறையின் ஆலோசனையைப் பெறுவீர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வானிலை ஆய்வு துறையின் ஆலோசனையைப் பெறுவீர்

அலோர் ஸ்டார், செப்டம்பர் 20-

கடற்கரையோரங்கள் மற்றும் கடல் பகுதிகளில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்வதாக இருப்பினும் நடப்பு வானிலை குறித்து வானிலை ஆய்வுத்துறையின் வழிகாட்டலை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கு கடல் வானிலை வழிகாட்டலை பின்பற்றுவதில் அதிக அக்கறை கொள்ளுமாறு கடல்சார் சமூகமான மீனவர்கள், சுற்றுப்பயண படகு நடத்துனர்கள் மற்றும் பயணிகள் ஆகியோரை மலேசியா கடல்சார் அமலாக்க ஏஜென்சி - யின் கோலா கெடா மரிதிம் கடல்சார் இயக்குனர் கோமாந்தர் மரிதிம் நூர் அஸ்ரேயந்தி இஷாக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாரம் முழுவதும் வட மாநிலங்களின் கடற்பகுதிகளில் பேரலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இத்தருணத்தில் கடல் நடவடிக்கைகள் பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
"கடல் பகுதிகளில் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக இவ்வகையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →