கோலாலம்பூர், அக்டோபர்.23-
முன்னாள் பிரதமர் ஒருவரின் மருமகன் தொடர்ந்து தேடப்படுகிறார். அவர் வெளிநாட்டில் இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டிற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மினால் அவர் தேடப்பட்டு வருவதாக ஐஜிபி குறிப்பிட்டார்.
அந்த நபரைப் பிடிப்பதற்கு கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் இருக்கும் நாட்டின் உதவி மட்டுமே நமக்கு தேவைப்படுகிறது. இறைவன் அருளில் இப்பிரச்னை தீர்க்கப்படும் என்று முகமட் காலிட் தெரிவித்தார்.








