Oct 16, 2026
Thisaigal NewsYouTube

அந்த தனியார் மருத்துவமனை குறித்து விசாரணை நடத்தப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அந்த தனியார் மருத்துவமனை குறித்து விசாரணை நடத்தப்படும்

ஷா ஆலாம், டிச. 11-


மருத்துவமனையின் கட்டணத்தை செலுத்தத் தவறியதால் இறந்து விட்ட குழந்தையின் சடலத்தை அதன் பெற்றோரிடம் ஒப்படைக்க மறுத்து விட்டதாக கூறப்படும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் செயல்குறித்து சுகாதார அமைச்சு விசாரணை நடத்தும் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்லி அகமட் தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனையின் அமலாக்க நடைமுறைகளை கண்காணிக்கும் சுகாதார அமைச்சின் தனிப்பிரிவு இந்த விசாரணையை மேற்கொள்ளும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இரண்டு வாரங்களாக குழந்தையின் சடலத்தை ஒப்படைக்காமல், கட்டணப்பாக்கியை மட்டுமே கோரியதாக கூறப்படும் அந்த மருத்துவமனையின் செயல் எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து விரிவாக ஆராயப்படும் என்று டாக்டர் சுல்கிப்லி தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →