Sep 23, 2026
Thisaigal NewsYouTube
2,000 மீத்தேன் சிலிண்டர்கள் வெடித்து பரபரப்பு: ஸ்ரீ கம்பாங்கான் மொத்த சந்தையில் பயங்கர தீ
தற்போதைய செய்திகள்

2,000 மீத்தேன் சிலிண்டர்கள் வெடித்து பரபரப்பு: ஸ்ரீ கம்பாங்கான் மொத்த சந்தையில் பயங்கர தீ

Share:

சிலாங்கூர் மாநிலம் ஸ்ரீ கேம்பாங்கன் பகுதியில் உள்ள மொத்த சந்தையில் நேற்று இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், அங்கு இருந்த சுமார் 2,000 மீத்தேன் எரிவாயு சிலிண்டர்கள் தொடர் வெடிப்பை ஏற்படுத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

நேற்று இரவு சுமார் 10.50 மணியளவில் ஏற்பட்ட தீ, பலத்த காற்றால் வேகமாக பரவி, தீப்பிழம்புகள் மற்றும் அடர்ந்த புகை சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திலிருந்தே தென்பட்டது.

இந்நிலையில், சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15 தீயணைப்பு நிலையங்களில் இருந்து 68 தீயணைப்பு அதிகாரிகள், 67 தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் மற்றும் 19 வாகனங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஆரம்பத்தில் பல தொடர் வெடிப்புகள் ஏற்பட்ட போதிலும், தீ அதிகாலை 1.20 மணியளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அறிவித்துள்ளது.

Related News