இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் திரங்காணு மாநிலத்திற்கு 6.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததன் மூலம் 1.4 முதல் 1.5 பில்லியன் ரிங்கிட் வரை வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில சுற்றுலா, கலாசாரம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றக் குழுத் தலைவர் டத்தோ ரஸாலி இட்ரிஸ் வெளியிட்டுள்ள தகவலில், வருகை தந்தவர்களில் 70 சதவீதம் உள்நாட்டைச் சேர்ந்தவர்களும், 30 சதவீதம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வளர்ச்சியின் அடிப்படையில், இந்த ஆண்டு இறுதிக்குள் 90 லட்சம் சுற்றுலாப் பயணிகள் என்ற இலக்கை மாநிலம் எட்டும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2025-ஆம் ஆண்டில் திரெங்கானுவிற்கு 15.46 மில்லியன் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், அவர்களில் 5.2 மில்லியன் பேர் மாநிலத்தில் தங்கியிருந்து சுற்றுலாவை அனுபவித்தது, திரெங்கானுவை வெறும் வழித்தடமாக அல்லாமல் தரமான சுற்றுலா இலக்காக மாறியிருப்பதை நிரூபிப்பதாகவும் ரஸாலி இட்ரிஸ் தெரிவித்துள்ளார்.








