Jul 31, 2026
Thisaigal NewsYouTube
பேராவில் மீண்டும் வெள்ளம் !
தற்போதைய செய்திகள்

பேராவில் மீண்டும் வெள்ளம் !

Share:

பேரா மாநிலத்தில் நேற்று மாலை பெய்த தொடர் மழையால் லாருட் மாத்தாங்,செலாமா, ஆகிய மாவட்டங்களில் 10 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு தற்காலிகத் துயர் துடைப்பு மையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து தகவல் அளித்த பேரா மாநில பொதுத் தற்காப்புப் படையின் பேரிடர் மேலாண்மை செயலகம் வெளியிட்ட அறிக்கையில், கம்போங் மாத்தாங் கெலுகோர் மக்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

இதனிடையே, மலேசிய வானிலை ஆய்வு மையமான METMalaysia வெளியிட்ட அறிக்கையின்படி, உலு பேரா மாவட்டத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என கணித்துள்ளது.

அதே சமயம், சங்காட் ஜோங்இல் உள்ள சுங்ஙை பிடோர் ஆற்றின் நீர் மட்டம் அபாய அளவான 2 மீட்டரைக் கடந்து 3.57 மீட்டராகப் பதிவு செய்துள்ளது எனவும் public info banjir இணையத்தளம் தெரிவித்துள்ளது.

Related News