தஞ்சோங் மாலிம், நவம்பர்.14-
தஞ்சோங் மாலிம் வட்டாரத்தில் கடைகளை இலக்காகக் கொண்டு கொள்ளையிட்டு வரும் நபரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பெண்களின் ஆடையை அணிந்து கொண்டு கொள்ளையடிக்கும் அந்த நபர், தஞ்சோங் மாலிம் வட்டாரத்தில் கடைகளில் நிகழ்ந்த சம்பவங்களுக்குக் காரணமானவர் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று போலீசார் குறிப்பிட்டனர்.
கடைகளில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவின் பதிவுகளை ஆராய்ந்த போது, பெண்ணின் ஆடையில், தலைக்கவசம் அணிந்துள்ள ஒரே நபரின் உருவமே பதிவாகியிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.








