Oct 18, 2026
Thisaigal NewsYouTube

யானை மிதித்து குத்தகைத் தொழிலாளர் மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
யானை மிதித்து குத்தகைத் தொழிலாளர் மரணம்

மெர்சிங்,செப்டம்பர் 26-

தங்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் யானை ஒன்றை விரட்ட முயற்சி செய்த குத்தகைத் தொழிலாளர் ஒருவர், அந்த யானை மிதித்து பரிதாபமாக மாண்டார். அதேவேளையில் அவரின் நண்பர் யானையால் தூக்கி எறியப்பட்டு, கடுங் காயங்களுக்கு ஆளாகினார்.

இச்சம்பவம் இன்று காலை 11 மணியளவில் ஜோகூர், மெர்சிங், ஃபெல்டா தெங்கரோ லிமா தேசிய இடைநிலைப்பள்ளி அருகில் உள்ள வனப்பகுதியில் நிகழ்ந்தது.

வனப்பகுதியை சுத்தம் செய்யும் பணியின் போது, அவர்களை அந்த மதம் கொண்ட யானை மிக மூர்க்கமாக தாக்கியதாக மெர்சிங் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் ஷெரீப் ஷாய் ஷெரீப் மொண்டோய் தெரிவித்தார்.

உயிரிழந்த அந்த குத்தகைப் பணியாளரின் உடல் சவப்பரிசோதனைக்காகமெர்சிங் மருத்துமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →