கோலாலம்பூர், செப்டம்பர்.13-
உலகெங்கிலும் உள்ள 1.8 பில்லியன் ஐபோன் பயனர்களும், தற்போது பரவி வரும் புதிய மோசடி ஒன்று குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
சைபர் குற்றவாளிகள், iCloud Calendar அழைப்புகளைப் பயன்படுத்தி, ஆப்பிளின் மின்னஞ்சல் போல் தோற்றமளிக்கும் phishing மின்னஞ்சல்களை அனுப்பி இம்மோசடியில் ஈடுபட்டு வருவதாக நம்பப்படுகின்றது.
பேபால் என்ற செயலி மூலமாக, ஒரு மிகப் பெரிய தொகைக்கான ரசீது ஒன்றை போலியாகத் தயாரித்து, அதனை ஐபோன் பயனர்களுக்கு அனுப்பிய பின்னர், அதன் மூலமாக அவர்களது கணக்குகளை ஹேக் செய்வதாகவும் Bleeping Computer என்ற நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.








