Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சிறுவனை அமானுஷ்ய சக்தி இயக்கியதா?
தற்போதைய செய்திகள்

சிறுவனை அமானுஷ்ய சக்தி இயக்கியதா?

Share:

லங்காவியில், ஆறு வயது சிறுவன் ஒருவன் சுமார் 2.5 கிலோமீட்டர் தூரம் வரை காரை ஓட்டிச் சென்று, மின்சார கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் பின்னணியில், அச்சிறுவனை அமானுஷ்ய சக்தி இயக்கியதா? என்ற சந்தேகம் வலுக்கிறது.

தமது 3 வயது தம்பியையும் ஏற்றிகொண்டு அச்சிறுவன் காரை இயக்கியது, அமானுஷ்ய சக்தியுடன் தொடர்புப் படுத்தப்பட்டு, லங்காவியில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதன் உண்மைத் தன்மையை உறுதிப் படுத்த இயலாவிட்டாலும், அச்சிறுவன் சொன்னக் கதை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

அந்தக் காரை தாம் ஓட்டிச் செல்ல வில்லை என்றும், 'TOK WAN' என்ற ஒரு நபர் இயக்கியதாகவும், அவரின் அருகில் தாமும் தமது தம்பியும் அமர்ந்து இருந்ததாகவும் அச்சிறுவன் சொன்னக் கதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News