ஈப்போ, செப்டம்பர்.20-
ஈப்போ, செம்மோர் பகுதியைச் சேர்ந்த உணவகம் ஒன்றில், நேற்று அந்த உணவக உரிமையாளரின் கை, அரவை இயந்திரத்தில் சிக்கி கொண்டதில் அவர் பலத்த காயமடைந்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில், பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு கிடைத்தத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற அவர்கள், சுமார் 1 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் அவரை மீட்டுள்ளனர்.
இறைச்சி அரைக்கும் அரவை இயந்திரத்தில், அவரது வலது கை சிக்கிக் கொண்டதையடுத்து, அவரது கையில் anaesthesia கொடுக்கப்பட்டு, சுமார் 40 நிமிடங்களுக்குப் பின்னர் மீட்டுள்ளனர்.
இந்நிலையில், மீட்கப்பட்ட அவரது வலது கையில் 4 விரல்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








