58 வயதுடைய தமது தாயாரை அடித்து காயப்படுத்தியதாக வயது குறைந்த இளைஞர் ஒருவர் உட்பட இரு மகன்கள் போர்ட்டிக்சன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று காலையில் குற்றஞ்சாட்டப்பட்டனர். 29 மற்றும் 17 வயதுடைய அந்த இரு இளைஞர்களும் மாஜிஸ்திரேட் உத்மான் அப்துல் கனி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
இவ்விருவரும் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி இரவு 9.28 மணியளவில் போர்ட்டிக்சன் அருகில் உள்ள தாமான் பெர்த்தாமா வில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறை அல்லது 2 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 326 ஆவது பிரிவின் கீழ் இரு சகோதர்களும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.








