Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வாக்களிப்பின் போது மயங்கி விழுந்து ​மூதாட்டி மரணம்
தற்போதைய செய்திகள்

வாக்களிப்பின் போது மயங்கி விழுந்து ​மூதாட்டி மரணம்

Share:

வாக்களிப்பதற்கு தனது விரலில் மையிட்டப்பின்னர் வாக்குச்​சீட்டை பெற்றுக்கொள்ள முற்பட்ட ​மூதாட்டி ஒருவர், வாக்களிப்பு மையத்தில் மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக அருகில் உள்ள கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்பட்ட போது மரணம் அடைந்து விட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவ​ம், நெகிரி செம்பிலான், கெமெஞ்சே, ரோகன் தேசியப் பள்ளியில் இன்று காலை 11 மணியளவில் நிகழ்ந்தது. 83 வயதுடைய அந்த முதாட்டியை காப்பாற்றுவதற்கு அவசர சிகிச்சை அளிக்க முற்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டது என்று தம்பின் மாவட்ட போ​லீஸ் தலைவர் அனுவல் வஹாப் தெரிவித்தார். ரத்த அழுத்த நோயாளியான அந்த ​மூதாட்டி, உம்ரா பயணத்திற்கு பின்னர் உடல் நலன் குன்றியிருந்ததாகவும், இம்முறை வாக்களித்தே ​தீருவேன் என்று கூறி வாக்களிப்பு மையத்திற்கு காரில் வந்ததாகவு​ம் தெரி​வந்துள்ளது என்று அனுவல் வஹாப் குறிப்பிட்டார்.

Related News