ஜோகூர் பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றின் இடைத் தேர்தல்களில் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருப்பது மூலம் அம்னோ - டிஏபி ஒத்துழைப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் சர்காஷி தெரிவித்துள்ளார்.
கடந்த சில தேர்தல்களில் இவ்விரு கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, மோசமான அடைவு நிலையை பதிவு செய்த போதிலும் , நேற்று நடைபெற்ற இந்த இரண்டு இடைத் தேர்தல்களில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருப்பது மூலம் அம்னோ - டிஏபி ஒத்துழைப்பு 2.0 ( டூ பாயிண்ட் ஓ ) மூலம் தொடங்கியிருப்பதாக புவாட் சர்காஷி குறிப்பிட்டார்.
இது உண்மையிலேயே ஒரு நல்ல தொடக்கமாகும் என்று அவர் வர்ணித்துள்ளார்.








