புத்ராஜெயா மருத்துவமனைக்கு மறைந்த துன் டாக்டர் ஹஸ்மா அலியின் பெயரைச் சூட்ட பெரிக்காத்தான் நேஷனல் முன்மொழிந்துள்ளது. நாட்டின் பொதுச் சுகாதாரத் துறை வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ஹம்ஸா ஸைனுடின், இன்று, 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது மக்களவையில் இதனைத் தெரிவித்தார். அடுத்த முறை ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால், இந்தப் பெயர் மாற்றத்தைச் செயல்படுத்துவோம் என்றும் அவர் கூறினார்.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட்டின் மனைவியான டாக்டர் ஹஸ்மா அலி, கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி தனது 100ஆவது வயதில் காலமானார். அவரது உடல் புத்ராஜெயா, பிரசிண்ட் 20 -இல் உள்ள புசாரா நெகாராவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.








