ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.23-
அந்நிய நாட்டுப் பதிவு எண்களைக் கொண்ட வாகனங்கள் உதவித் தொகைக்குரிய பெட்ரோல் ரோன்95 எரிபொருளை வாங்குவதற்கு அரசாங்கம் விதித்துள்ள தடை தொடரும் என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.
உதவித் தொகைக்குரிய அவ்வகை எரிபொருளை வாங்குவதற்குத் தகுதியற்றவர்களுக்குத் தடை விதிக்கப்பட்ட போதிலும் அந்த தடை அந்நிய நாட்டு வாகனங்களுக்கும் பொருந்தும் என்று அவர் விளக்கினார்.
எனினும் அந்நிய நாட்டுப் பதிவு எண்களைக் கொண்ட வாகனங்கள் பெட்ரோல் ரோன்97 எரிபொருளை வாங்குவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.








