Oct 16, 2026
Thisaigal NewsYouTube

சுற்றுச்சூழலல் தூய்மைக்கேடு தொடர்பான 314 நோட்டீஸ்களை வெளியிட்டது பினாங்கு மாநில சுற்றுச்சூழல் துறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுற்றுச்சூழலல் தூய்மைக்கேடு தொடர்பான 314 நோட்டீஸ்களை வெளியிட்டது பினாங்கு மாநில சுற்றுச்சூழல் துறை

டிச. 23-

சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974 ஐ மீறிய தொழில்துறை நிறுவனங்களுக்கு 314 நோட்டீஸ்களை வெளியிட்டுள்ளது பினாங்கு சுற்றுச்சூழல் துறை. இவை, இந்த ஆண்டு நடத்தப்பட்ட வழக்கமான ஆய்வுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டன என அதன் இயக்குநர் Norazizi Adinan தெரிவித்தார்.

இந்த ஆய்வுகளில் பிளாஸ்டிக், இரசாயனம், உலோகங்கள், ரப்பர், உணவு, ஜவுளி, இன்னும் பிற தொழில்களைச் சேர்ந்த 1307 நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. பெறப்பட்ட புகார்களின் அடிப்படையிலும் மாசுபடுத்தும் அபாயம் உள்ள நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டது. இதன் விளைவாக, பல நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டதோடு விசாரணை அறிக்கைகளும் திறக்கப்பட்டுள்ளன.

பல்வேறு அமைப்புகளுடன் பினாங்கு சுற்றுச்சூழல் துறை இணைந்து Op Gempur என்ற சோதனையை நடத்தியது. இதன் மூலம் 250 நிறுவனங்களும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் ஆய்வு செய்யப்பட்டன. மேலும் பல நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டு வழக்குத் தொடர பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

சுற்றுச்சூழல் தரத்தைப் பாதுகாப்பதில் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று Norazizi வலியுறுத்தினார். ஒருங்கிணைந்த இந்த அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்