புத்ராஜெயா, ஆகஸ்ட்.06-
புறநகர்ப் பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கூடியபட்சம் 1,500 ரிங்கிட் மாதாந்திர சிறப்பு அலவன்ஸ் தொகையை மறு ஆய்வு செய்வதற்கு அரசாங்கம் இன்னும் தயாராகவில்லை என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.
தற்போது புறநகர்ப் பகுதிகளில் ஆசிரியர்கள், பணியாற்றும் இடங்கள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு சிறப்பு படித்தொகை வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
புறநகர்ப் பகுதிகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, அவர்களுக்கு தலா ஆயிரம் ரிங்கிட் சிறப்புப் படித்தொகை வழங்கப்பட்டுகிறது. அதே வேளையில், பிரிவு ஒன்றிலும், பிரிவு இரண்டிலும் 500 ரிங்கிட் சிறப்புப் படித்தொகை வழங்கப்படுவதாக இன்று நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பதிலில் ஃபாட்லீனா இதனைத் தெரிவித்தார்.








