Oct 2, 2026
Thisaigal NewsYouTube

சரவாக்கில் சுற்றுச்சூழல் ஆர்வலர் நுழையத் தடை: ப்ரோஜெக் சாமா கேள்வி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சரவாக்கில் சுற்றுச்சூழல் ஆர்வலர் நுழையத் தடை: ப்ரோஜெக் சாமா கேள்வி

சரவாக்கிற்குள் மலேசிய மண்ணின் தோழர் கழகத்தின் தலைவர் மீனாக்‌ஷி ராமன் நுழையத் தடை விதிக்கப்பட்டது குறித்து மலேசியாவுக்கான நிலைத்தன்மை மற்றும் பொறுப்புடைமைத் திட்டமான ப்ரோஜெக் சாமா அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

சரவாக் அரசின் குடிநுழைவு அதிகாரம் சுற்றுச்சூழல் தொடர்பான விசாரணைகளிலிருந்து அரசியல்வாதிகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படக்கூடாது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேவேளை, 1963 ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தம் மற்றும் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் சரவாக்கிற்கு உள்ள சிறப்பு அதிகாரம், மக்களின் சமூகப் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மீனாக்‌ஷி ராமனுக்கு சரவாக்கிற்குள் நுழையத் தடை விதித்ததற்கான காரணத்தை அதிகாரிகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் ப்ரோஜெக் சாமா வலியுறுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி சரவாக்கை சென்றடைந்தபோது மீனாக்‌ஷி தடுத்து நிறுத்தப்பட்டதாக மலேசிய மண்ணின் தோழல் கழகம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →