Dec 23, 2025
Thisaigal NewsYouTube
டுரியான் தோட்டத்தில் ஷாபு பதனிடும் கூடம் கண்டுபிடிப்பு
தற்போதைய செய்திகள்

டுரியான் தோட்டத்தில் ஷாபு பதனிடும் கூடம் கண்டுபிடிப்பு

Share:

பாலிக் பூலாவ், டிசம்பர்.23-

டுரியான் தோட்டத்தில் போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஷாபு வகையைச் சேர்ந்த போதைப்பொருள் பதப்படுத்தப்படும் கூடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் சுமார் 38 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பினாங்கு, பாலிக் பூலாவ், தெலுக் பாஹாங்கில் உள்ள ஒரு டுரியான் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பெரியளவில் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் துடைத்தொழிப்பு இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

உளவுத்துறை வழங்கிய தகவலின் அடிப்படையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பினாங்கு மாநிலத்தில் ஏகக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் போதைப் பொருள் பதப்படுத்தப்படும் கூடம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்ததாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஹுசேன் பேசுகையில் குறிப்பிட்டார்.

ரசாயன ஆய்வாளர்களான 32 க்கும் 38 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் போதைப் பொருள் தயாரிப்புக் கூடச் செயல்பாடு முறியடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News