Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பிரதமரின் மனைவி என்ற வாகன எண் பட்டை சபா அரசின் நடைமுறையே தவிர வான் அசிசா வின் கோரிக்கை அல்ல
தற்போதைய செய்திகள்

பிரதமரின் மனைவி என்ற வாகன எண் பட்டை சபா அரசின் நடைமுறையே தவிர வான் அசிசா வின் கோரிக்கை அல்ல

Share:

சபா, கோத்தா கினாபாலுவில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் துணைவியார் டத்தின் ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் பயணித்த காரின் பின்புறம் "பிரதமரின் துணைவியார்" என பதிவிடப்பட்ட வாகன எண் பட்டையைக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதைத் தொடர்ந்து, அது டாக்டர் வான் அசிசாவில் வேண்டுக்கோளின் அடிப்படையில் வைக்கப்பட்டது அல்ல என்று மாநில செயலாளர் டத்தோ ஶ்ரீ சபார் உந்தோங் மறுப்பு தெரிவித்துள்ளார்.

டாக்டர் வான் அசிசா, கோத்தா கினாபாலுவிற்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்ட போது மாநில அரசாங்கத்தால் "பிரதமரின் துணைவியார்" என்று பதிவிடப்பட்ட எண் பட்டை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக டத்தோ ஶ்ரீ சபார் உந்தோங் தெளிவுபடுத்தியுள்ளார்.

பிரதமர் மற்றும் துணை பிரதமர்கள் அல்லது அவர்களுது துணைவியார் போன்ற முக்கிய விருந்தினர்களின் அதிகாரப்பூர்வ வருகையின் போது இது போன்ற வாகன வசதிகளை செய்து தருவது மாநில அரசின் வழக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News